அவோகேடோ /வெண்ணெய் பழம்
அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
1, முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாடுகளை நீக்கவும் கட்டுபடுத்தவும் இப்பழம் உதவுகிறது
2, இப்பழத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளதால் எடை குறிப்பில் அதிக பங்கு வகிக்கிறது
3, 2. இதயத்திற்கு ஏற்றது - இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க காரணமான பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை இப் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு இப் பழம் உகந்தது .
4,நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது - வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
5, நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது .
இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
வாழைபழத்தை விட 35%அதிக அளவு பொட்டசியம் சத்து இதிலுள்ளது
வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் உதவுகிறது .பல்வேறு ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த பழத்தில் steroline என்னும் புரதசத்து அதிக அளவில் உள்ளது. இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறையும்போது , வயதான தோற்றம், தோலில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வெண்ணெய் பழத்தை பொதுவாக அப்படியே சாப்பிடலாம். மற்றும் மில்க் ஷேக் மற்றும் ஐஸ் க்ரீம்களிலும் சேர்த்து உண்ணலாம் .
அவோகேடோ ஜூஸ்:-
இந்த வெண்ணெய் பழத்தின் ஜூஸ் சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும். எனவே தினமும் ஒரு டம்ளர் அவோகேடோ ஜூஸ் குடித்தால், சருமம் அழகாக, சுருக்கமின்றி காணப்படும்
நம் நாட்டில் இப்பழமரம் குன்னூர் பகுதி கொலக்கம்பை, முசாபுரி, கரும்பாலம், தூதூர்மட்டம், சுல்தான எஸ்டேட், உலிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நடவு செய்கின்றனர் . ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இதன் சீசன் துவங்கும். அறுவடை செய்யப்பட்டபின் இப்பழம் ஊட்டி, குன்னூர், மேட்டுபாளையம் ஆகிய மண்டிகளுக்கு கொண்டு விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஊட்டி, குன்னூர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் முன்பு இப்பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,
CEO, SUGA Consulting Services
Email: ceo@sugaconsulting.in , sugagreenservices@gmail.com
http://suga-green-services.blogspot.in/
Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149
SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004
Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room
No comments:
Post a Comment