Total Pageviews

Tuesday, September 27, 2016

2-10-2016 வரும் ஞாயிற்று கிழமை திருப்போரூர் அருகே உள்ள ஒரு இயற்கை வேளாண் பண்ணையில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி



வரும் ஞாயிற்று கிழமை திருப்போரூர் அருகே உள்ள ஒரு இயற்கை வேளாண் பண்ணையில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி உள்ளது .தன்னார்வலர்கள் தேவை ..வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும் ..
தொடர்புக்கு : 9940654603,9840096007

http://suga-green-services.blogspot.in/2016/09/2-10-2016.html

For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services


Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004


Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Friday, September 23, 2016

கறிவேப்பிலை - Health benefits of curry leaves




*🍃 கறிவேப்பிலை 🍃*
🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
*🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*

http://suga-green-services.blogspot.in/2016/09/health-benefits-of-curry-leaves.html

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்
* இதில் இருப்பவை :-*
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
*🍃 கொழுப்புக்கள் கரையும் :*
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
*🍃 இரத்த சோகை :*
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
*🍃 சர்க்கரை நோய் :*
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
*🍃 இதய நோய் :*
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
*🍃 செரிமானம் :*
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
*🍃 சளித் தேக்கம் :*
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
*🍃 கல்லீரல் பாதிப்பு :*
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
*🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*
🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
👫 👬 👭 👯 குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
📱 📲 📩 📨 📥 📤
பகிர்வோம்...
The curry tree (Murraya koenigii or Bergera koenigii) is a tropical to sub-tropical tree in the family Rutaceae (the rue family, which includes rue, citrus, and satinwood), which is native to India and Sri Lanka.
Its leaves are used in many dishes in India, Sri Lanka, and neighbouring countries. Often used in curries, the leaves are generally called by the name 'curry leaves', although they are also literally 'sweet neem leaves' in most Indian languages (as opposed to ordinary neemleaves which are very bitter and in the family Meliaceae, not Rutaceae).


💞 இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள் 🌹🌹🌹🌹

Sunday, September 18, 2016

Sugavanam Goshala - All cows are welcome - Donate for cows





Sugavanam Goshala - All cows are welcome - Donate for cows

Sugavanam Goshala is started to protect cows.  Anybody can donate a cow and cow feeds to our Goshala.

Gaushalas or Goshalas are protective shelters for cows in India. Goshalas focus on treating cows well out of their religious significance in Hinduism and consequent cultural sensitivity towards their welfare.

Goshala, a Sanskrit word ("Go" means cow and "Shala" means a shelter place: Go + Shala = shelter for cows), means the abode or sanctuary for cows, calves and oxen


For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004


Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room


Friday, September 16, 2016

வேப்பம் பழம் விதை மரத்திலிருந்து விழுகின்ற பருவம் இது!




வேப்பம் பழம் விதை மரத்திலிருந்து விழுகின்ற பருவம் இது!
நீங்க வேப்ப மரத்துக்கு பக்கத்துல போகுறப்போ,
உங்களால முடிஞ்ச வேப்பம்பழங்கள கையில எடுத்துக்கிடுங்க,
அதை சாலை ஓரங்களிலும்
ஏரி . குள கரையோரங்களிளும்
போகுறப் போக்குல தெளித்து விடுட்டுப் போங்க!!
அதுவா முளைச்சு மரமா வந்திடும். . . .
மழை வரவேண்டிய பருவமும் நெருங்கிடுச்சி...
மரத்தை வளர்க்க இது நம்மாலான சிறு முயற்சி!!
இதை அலட்சியப்படுத்திடாதீங்க. . .
அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி.


http://suga-green-services.blogspot.in/2016/09/blog-post_16.html

Plant a Tree Water a Tree to get water in Cauvery River India for Peace





Plant a Tree Water a Tree to get water in Cauvery River India for Peace

http://suga-green-services.blogspot.in/2016/09/plant-tree-water-tree-to-get-water-in.html

Plant a Tree Water a Tree to get water in Cauvery River India for Peace

https://www.facebook.com/Plant-a-Tree-Water-a-Tree-to-get-water-in-Cauvery-River-India-for-Peace-661768050656915/

மஞ்சள் பால்…! - Turmeric Milk...




மஞ்சள் பால்…!  - Turmeric Milk...
மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன.
நம்முடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.
மஞ்சள் பால் செய்முறை :
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும். இப்போது இறைவன் நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான நன்மைகளைப் பார்ப்போம்.
சுவாசக் கோளாறு
மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
புற்றுநோய்
மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.
தூக்கமின்மை
வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.
ஜலதோஷம் மற்றும் இருமல்
மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
கீல்வாதம்
மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.
வேதனை மற்றும் வலிகள்
மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது
கல்லீரல் நச்சு நீக்கி
மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.
எலும்பு சுகாதாரம்
மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.
செரிமான நலம்
இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.
மஞ்சள் பால்...!மாதவிடாய் தசைப்பிடிப்புகள்
இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சொறி மற்றும் சருமம்
சிவத்தல் கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும். மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும்.
எடை குறைப்பு
மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
எக்ஸிமா/சிரங்கு
எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும். 

http://suga-green-services.blogspot.in/2016/09/turmeric-milk.html

Thursday, September 15, 2016

வெண்மைப் புரட்சி என்ற அழகான பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கும் குரூரம்



வெண்மைப் புரட்சி என்ற அழகான பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கும் குரூரம் இது.
கன்றுகளின் வயிற்றில் அடித்துவிட்டு, வெறும் எந்திரத்தை வைத்து பால் உறிஞ்சுவதுதான் இப்போதைய ‘பால் உற்பத்தித் தொழில்’. பசுக்களின் கழுத்தில் ஊசி குத்தி, குருதியைப் பாலாகத் திரித்துத்தான் பால் நிறுவனங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. பாலில் கால்சியம் இருக்கிறதா, புரதம் இருக்கிறதா, வைட்டமின் இருக்கிறதா எனக் கேட்பவர்களே, எனக்குத் தெரிந்த ஒன்று அதில் உள்ளது. மனிதப் பேராசை எனும் சூனியம் அந்தப் பாலில் உள்ளது.
சக உயிரினத்தின் உடலையும் உயிரையும் குறித்த அக்கறையே இல்லாமல், சுரண்டிச் சுரண்டி பழகிய நவீன மனிதர்களுக்கு பசுவின் வாழ்க்கையைச் சுரண்டுவதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இருக்கப் போவதில்லை. திருந்துவதைப் பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் மேலும் மேலும் பசுக்களையும் காளைகளையும் அவற்றின் கன்றுகளையும் துன்புறுத்தி மகிழட்டும். ’எனக்கு மனசாட்சி உறுத்துகிறது’ என்று எண்ணுவோருக்கான சில வழிகாட்டுதல்களை முன்வைக்கிறேன்.
1. தனியார் பால் நிறுவனங்களின் பால் பொருட்களை முற்றிலும் நிராகரியுங்கள்.
2. நாட்டுப் பசுக்களைப் போற்றிப் பாதுகாக்க உங்களால் இயன்றவற்றை எல்லாம் செய்யுங்கள்.
3. நாட்டுக் காளைகளை வாங்கிப் பாதுகாத்திடுங்கள்.
4. உங்களிடம் நிலம் இல்லையெனில் சரியான வேளாண் பண்ணைகளுக்குக் காளைகளை அன்பளிப்பாகக் கொடுங்கள்.
5. வணிக நோக்கில் பண்ணை வைப்போரிடம் இவற்றைக் கொடுத்து மீண்டும் ஏமாறாதிருங்கள்.
6. பொதுவாகவே, பால் பருகும் வழக்கத்தை நிறுத்துங்கள். தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவைதான் சிறந்த உணவுகள். பால் மட்டும் அருந்துவது நம் மரபில் மிகவும் குறைவான வழக்கம்.
7. பால்பவுடர் மற்றும் பாக்கெட் பால் வகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.
8. இவற்றிலும் தனியார் பால் பாக்கெட்டுகளை முற்றிலும் நிராகரியுங்கள். நிலைமை மாறும்வரை, ஆவின் மட்டும் வாங்குங்கள்.
9. தயிருக்கு வீட்டிலேயே பிறை ஊற்றுங்கள்.
10. கடைகளில் தேநீர் பருகும் வழக்கம் இருந்தால், பாலில்லா தேநீருக்கு மாறுங்கள்.

https://www.facebook.com/photo.php?fbid=1778673592392995&set=gm.493687737422399&type=3
https://www.facebook.com/groups/251422208315621/

Saturday, September 10, 2016

PUTHIYATHOR ULAGAM SEIVOM Episode- 7 - வார இறுதி வேளாண்மை







ஒரு தலைமுறை வேளாண்மையை விட்டு வெளியேறும் போது இன்னொரு தலைமுறை அதனை ஈடு செய்ய வேண்டும் ....நுகர்வு கலாச்சாரத்தின் மோகத்தாலும், அரசின் பொறுப்பற்ற தனத்தாலும் ,பருவநிலை மாற்றங்களாலும் கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது... நெற்கட்டுகளை சுமந்த தலைகள் இன்று செங்கற்களை சுமக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் ...இன்று வேளாண் நிலங்கள்,செங்கற்சூளைகளாக மாறி வருகிறது என்பதே நிதர்சனம் .. நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விரக்தியில் வேளாண்மையை விட்டு வெளியேறிய உழவர்கள் இன்று நகரத்தில் காவலாளிகளாக ,கூலிகளாக வேலை செய்து வருகின்றனர் ... ஒரு உழவனின் தற்சார்பு வேளாண்மையை அழித்து அவர்களை கடனாளியாக்கி தற்கொலைகளுக்கு உட்படுத்தியத்தியதும் ,நிலத்தை விட்டு வெளியேற்றியதும் தான் வேளாண் கொள்கைகளை மேம்படுத்துவதாக கூறும் வேளாண் கல்லூரிகளின் ,அரசுகளின் அதிகபட்ச சாதனையாக கருத இயலும் .... ஒட்டு வாங்கி அரசியலுக்காகவே இன்னும் அரசியல்வாதிகள் உழவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.வேளாண்மைக்கு தொடர்பே இல்லாத பெரும் நிறுவனங்கள் எல்லாம் இன்று நமது உணவு உற்பத்தி முறையை தங்களின் வியாபாரத்திற்காக கையில் எடுத்திருக்கும் போது நம் உணவினை நாமே உற்பத்தி செய்து கொள்வதற்கான நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டு உள்ளோம் ...
வேளாண்மையில் இன்று ஆட்கள் பற்றாக்குறை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக கருதினாலும் ,அதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறும் அதே நேரத்தில், காலம் காலமாக ஒரு பிரிவினரே வேளாண் தொழிலில் வேலை ஆட்களாக ஈடுபட்டு வந்த போது ,அவர்கள் இன்று அதில் இருந்து விடுபட்டு அடுத்த நிலைக்கு செல்வதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் ...இன்னும் எத்தனை காலம் உழைப்பு சுரண்டலுக்கு குறிப்பிட்ட பிரிவினரே உட்படுவார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்... வள்ளுவன் கூறியது போல் "எல்லாவற்றிற்கும் முதன்மையானது உழவு தொழிலே"வயிறு என்ற உறுப்பு இருக்கும் வரை மனிதனால் உழவு தொழிலை கைவிட இயலாது ....ஆக உணவு என்பது எல்லோருக்கும் அடிப்படையான ஒன்றாக இருக்கும் போது வேளாண்மையில் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியமானது ...முக்கியமாக இளம் தலைமுறையினரின் பங்களிப்பு ...
அதன் ஒரு முயற்சியாகவே கடந்த 3 வருடங்களாக பல்வேறு நபர்களையும் ஒருங்கிணைத்து ,அமைதிகளற்ற நகர சூழலில் இருந்து விடுபட்டு ,கிராமம் நோக்கி உழவர்களிடையே ஒரு தன்னபிக்கையை அளிக்கும் விதமாக நமது உழைப்பினை வார இறுதி நாட்களில் வேளாண்மை சார்ந்து இயங்கி வருகிறோம் ...புது சூழலுடன் புதிய நபர்களின் நட்புகள் ,ஒத்த சிந்தனை கொண்ட மனிதர்களின் தொடர்புகள் ,எல்லாவற்றிக்கும் மேலாக நம் தட்டில் வரும் உணவிற்கு பின்னர் உள்ள உழைப்பினை,ஒரு உழவரின் தினசரி பிரச்னையை ,ரசாயன வேளாண்மையில் உள்ள பாதிப்பினை அறிந்து கொள்வதற்கு ஒரு படிநிலையாகவே இதனை கருதுகிறோம் ..நாட்டின் பெருவாரியான உணவு சிறு குறு விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்ய படுகிறது .அவர்களோடு இணைந்தே நமது பெரும்பாலான செயல்பாடுகள் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன ..அய்யா நம்மாழ்வார் உள்ளிட்ட பல்வேறு மனிதர்களின் பெரும் அனுபவத்தை உள்வாங்கி கொண்டு செயல்படும் இந்த பெரும்பயணத்தில் தொடர்ச்சியான தன்னார்வாளர்களின் ஆதரவுகள், மேலும் தொடர்ந்து செயல்படுவதற்கான தன்னப்பிக்கையை அளிக்கிறது.தொடர்ச்சியாக செயல்படுவோம் .எல்லோருக்கும் நன்றிகள் ...
TWA குறித்தான ,அதன் செயல்பாடுகள் குறித்தான ,பங்களிப்பவர்களின் கருத்துடன் கூடிய காணொளி .
நன்று : பொதிகை தொலைக்காட்சி
நன்றி : Prabhu mj

Tuesday, September 6, 2016

SUGA Green Services deal with Coffee Plantations in Kodaikanal





SUGA Green Services deal with Coffee Plantations in Kodaikanal

SUGA Green Services deal with Coffee Plantations in Kodaikanal, Perumalmalai, Thandikudi, Adalur, Pandrimalai and Dindigul district, Tamil Nadu State of India. We have an offer of coffee plantations for sales ranging from 1 acres to 400 acres. Some of fruit trees plantations also on offer are quite exclusive and can be used for setting up resorts, homestays, spas, villa plots, golf courses and holiday/vacation cottages. Some of the plantations also have streams running through the as also water falls. Most of the Estates/plantations offer you some stunning views of the western Ghat Mountains. Do contact us for any requirements we would source the property and also assist in the legal/paper work, registration, 
We also deal with Coffee estates, commercial properties for set up hotels cafe petrol pumps and hospitals we have suitable lands for dairy farm goat farm poultry farm greenhouse cold climate good scenic view lands for resorts and home stays.  



http://suga-green-services.blogspot.in/2016/09/suga-green-services-deal-with-coffee.html


For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services


Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004


Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room


Sunday, September 4, 2016

SUGA Organic Farming - SIP - Success in Planting - Systematic Investment Plan





SUGA Organic Farming - SIP - Success in Planting - Systematic Investment Plan

SUGA Organic Farming Agriculture having facility to invest in SIP = Systematic Investment Plan.  The cost of Organic farming started with base date 1-Aug-2016 with base rate of Rs.100/- and increases by 5 paise a day.  For Example, on 1-Sep-2016, the rate per sq.ft is Rs.101.55 with 5% entry load and 5% exit load.  The Rate of return works out to 18% pa

http://suga-green-services.blogspot.in/2016/09/suga-organic-farming-sip-success-in.html


For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services


Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004


Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

SUGA Organic Farming Agriculture Rs.100/ sq. feet with returns 18% pa





SUGA Organic Farming Agriculture

SUGA Group started Organic Farming to support and develop agriculture in India.  India is agriculture country and many agriculturists commit suicide because of poor rain and less yield and fluctuating purchase price of agricultural products. If anybody is willing to support our great Agriculture movement, you can invest with us. Organic Farming cost Rs.100/- per sq. feet with 18% return per year.

http://suga-green-services.blogspot.in/2016/09/suga-organic-farming-agriculture-rs100.html

For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services


Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room